மூடநம்பிக்கைகளை எதிர்க்கும் பெண்களை பலாத்காரம் செய்யவேண்டும் - என்று கூரிய பத்திரிக்கையாளர் வி.ஆர். பட்டை கண்டித்து கண்டன கூட்டம்

பி.ஜி.வி.எஸ். என்ற அமைப்பு மூடநம்பிக்கைகளை ஒழிக்க நாடு முழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறது.

பெங்களூரைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியை என். பிரபா இந்த அமைப்பின் கர்நாடக மாநிலச் செயலாளராக உள்ளார்.

தனது பேஸ்புக் முகவரியில் ராக்கட் ஏவுவதற்கு முன்பு பூஜை செய்வது நியாயமா ? இது தான் அறிவியலா ? என்று பதிவு செய்துள்ளார்.

கர்நாடக நாளிதழ் களில் கட்டுரைகள் எழுதி வரும் மத அடிப்படைவாதி வி.ஆர். பட் என்பவர் “ பிரபா போன்ற பெண்களின் தலைமுடியை பிடித்து தெருவுக்கு இழுத்துவந்து பலாத்காரம் செய்ய வேண்டும்” என்று பதிவு செய்துள்ளார். இதனைக் கண்டித்து விஞ்ஞானிகள் , பேராசிரியர்கள் , ஆசிரியர்கள்- பொது மக்கள் பங்கேற்கும் கூட்டம். நாமும் பங்கேற்ப்போம்.
இடம் :
நவபாரத் பதின் நிலை பள்ளி ,
பெரியார் சாலை பேருந்து நிறுத்தம், தி.நகர். வள்ளுவர்கோட்டம் அருகில்,
( கோடம்பக்கம் ரயில்நிறுத்தத்திலிருந்து 1/2 கி.மி)

நேரம் :
ஆகத்து 9, சனி , மாலை 4.30 மணி - 7 மணி